ஜூன் 20 இல் தேர்தலை நடத்த முடியுமென நம்பவில்லை

தற்போதைய புள்ளிவிபரங்களைக் கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படலாமென தான் நம்பவில்லையென முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்தியாவின் தி இந்து பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த செவ்வியில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையிலே ஜூன் 20 இல் தேர்தல் நடத்த திகதி குறிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொரோனா ஒழிப்பில் சார்க் அமைப்பு அதன் பிரதான பங்கை வகிக்க வேண்டுமெனவும் அதில் இந்தியா ஒரு முக்கிய வகிபாகத்தை வகிப்பது அவசியம் எனவும் கூறியுள்ள அவர்,கொரோனா வைரசை ஒழிக்க தெற்காசியாவுக்கு ஒரு மனிதாபிமான பொறிமுறை அவசியம் எனவும் கூறினார். இந்த நிலைமையை நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து மாத்திரம் கையாள முடியாவிடின் இந்தியாவின் பெங்களுர் மற்றும் இலங்கையின் கொழும்பு நகரை அதற்கு பயன்படுத்தலாம் எனவும் அவர் கூறினார்.

Tue, 04/28/2020 - 06:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை