அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000 பேர் பலி

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரே நாளில் 2,000 இற்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் இறப்புகளை பதிவு செய்த உலகின் முதல் நாடாக  அமெரிக்கா விளங்குகின்றது.

ஜோன்ஸ்  ஹோப்கின்ஸ் (Johns Hopkins) பல்கலைக்கழகத்தின் தகவலின் படி, அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,108 பேர் உயிரிழந்துள்ளதோடு, அரை மில்லியனுக்கும் அதிகமானோர் இந்நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸினால் அதிக உயிரிழப்புக்களை கொண்ட நாடாக  இத்தாலியை விட அமெரிக்கா விரைவில் விஞ்சிவிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின்  எண்ணிக்கை 16 இலட்சத்தை தாண்டியுள்ளதோடு, இந்நோய்த் தொற்றுக் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தற்போதைய நிலவரப்படி, 16 இலட்சத்து 77 ஆயிரத்து 190 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. நேற்று (10) ஒரே நாளில் மட்டும் புதிதாக 73,538 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sat, 04/11/2020 - 13:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை