ஏப்ரல் 20 இற்கு பின் 5,000 பஸ், 400 புகையிரத சேவைகள் பணியில்

ஏப்ரல் 20 இற்கு பின் 5,000 பஸ், 400 புகையிரத சேவைகள் பணியில்-Bus and Train Services After Apr 20

ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு பின்னர் இ.போ.ச. பஸ்கள் 5,000 மற்றும் 400 புகையிரத சேவைகளை பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஸ்தமப்பிதமடைந்த அரச மற்றும் தனியார் பிரிவு நடவடிக்கைகளை ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கட்டம் கட்டமாக இடம்பெறவுள்ள இந்நடவடிக்கைக்கு அமைய, அனைத்து சேவைகளையும் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றதோடு, பல்வேறு சுகாதார அறிவுறுத்தல்களை மை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள்
ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் 2 வாரங்களுக்கு பொது போக்குவரத்து சேவையை அத்தியாவசிய தேவைக்காக மாத்திரம் பயன்படுத்துவதற்கும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனையவர்களை பஸ்கள் மற்றும் ரயில்களில் ஏற்றாதிருப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் ரயில்வே திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உள்ளிட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடாத்திய கலந்துரையாடலின்போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவையை பயன்படுத்தும்போது சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறையினரால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளை கடுமையாக அமுல்படுத்தவும் இந்த கலந்துரையாடலின்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் உடல் வெப்பநிலையை பரிசோதித்தல் எவருக்கும் காய்ச்சல், தடிமல் காணப்பட்டால் சுகாதாரத் துறையினரின் ஆலோசனைக்கமைய செயற்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில் பெட்டிகள் மற்றும் ரயில் மார்க்கங்களில் எச்சில் துப்புதல், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், யாசகம் எடுத்தல் ஆகியனவும் முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ரயில் மற்றும் பஸ்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் முகக்கவசங்கள் அணிவதையும் ஒரு மீற்றர் இடைவௌியை பேணுவதையும் கட்டாயமாக்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள், ரயில் பெட்டிகள் மற்றும் பஸ்களை 2 நாட்களுக்கு ஒரு தடவை கிருமித் தொற்று நீக்கம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அதற்குத் தேவையான கிருமிநாசினிகளை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினூடாக பெற்றுக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு குறிப்பிட்டுள்ளது. (ஸ)

Sat, 04/18/2020 - 11:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை