கொவிட் – 19 அமெரிக்கா முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டது எவ்வாறு?

கொவிட் 19 என்கிற வைரஸ் உலகம் முழுதும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து கோரத்தாண்டவம் புரியவைத்தது கடந்த டிசம்பர் மாதம் தொடக்கம் இன்றுவரை அதற்கு முடிவே இல்லாமல் ஆட்டிப்படைக்கின்றது.

இன்று வரை சீனா முதற்கொண்டு ஐரோப்பியா மத்திய கிழக்கு,ஆசிய நாடுகள் வரை இதன் தாக்கம் குறையாமல் மக்கள் குருதிகளை குடித்துக் கொண்டு சவப்பெட்டிகளால் நிறைந்து பிணக்குவியல்களை குவித்துக் கொண்டு வருகின்றது.

குறைந்தது இவ்வைரஸ் உலக நாடுகளில் இருநூறு பிராந்தியங்களை தற்பொழுது முகிழ்த்துக் கொண்டுள்ளது அத்தோடு உலக வாழ் மக்களுக்கு இன்னோரன்ன பாடங்களையும் புகட்டியுள்ளது. உலக பொருளாதாரத்தை முற்றாக வீழ்த்தி ஆட்டம் காண வைத்து உலகத் தலைவர்களை கதிகலங்க வைத்துள்ளது. இக் கொவிட்-19 வைரஸ் உலகத்தில் மூன்றாம் உலக மகா யுத்தம் என பல்வேறாலும் அழைக்கப்ட்டாலும் அதனை சீனா திறமையாக முகம் கொடுத்து வெற்றிக் கண்டுள்ளது. தற்பொழுது சீனாவில்  இந்த கொடிய வைரஸின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக சரிவை நோக்கி சென்றுள்ளது.அண்மையில் பீஜிங் நகரில் ஐம்பதற்கு மேற்பட்டோர் வைரஸினால் தாக்கப்பட்டு இருந்ததாக தகவல்கள் வெளியாகின அவை உண்மைதான்.அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்த சீன தேசத்தினை சார்ந்தவர்கள் என சுகாதார ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

தற்பொழுது இவ்வைரஸின் ஆரம்ப கேந்திர மையமாக விளங்கிய ஹூவான் நகரில் மிக வேகமாக இக் கொடிய வைரஸ் குறைந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.இம்மாதம் தொடக்கம் சீனா ஹ{வான் நகரத்தில் எந்த வித புதிய தொற்று நோயார்களும், மரணமும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சீனாவில் தனிக்கட்சி அரசியல் நிலைப்பாடே காணப்படுகிறது ஆகவே முடிவுகளை எடுப்பதிலும் அதனை செயல் வடிவில் கொண்டு வரவும் இலகுத்தன்மை காணப்படுகிறது.

மிக வேகமாக பரவி வருகின்ற பொழுது வல்லரசு நாடான அமெரிக்க உட்பட மேலைத்தேய நாடுகள் சீனாவுக்கு எதிராக போர்கொடி தூக்கியதும் அவர்களை பாரதூரமாக விமர்சித்ததும் அறியக்கூடியது,

அத்தோடு இந்நோய் தொற்று காரணமாக சீனாவின் சிறந்த பொருளாதாரக் கொள்கை வீழ்ச்சிகாண போகின்றது என்ற சிந்தனை அமெரிக்கா உட்பட ஏனைய நாடுகளும் பகற்கனவு கண்டதோடு நம்பிக்கையுடனும் இருந்தது.

ஹூவான் நகரம் உட்பட சீனாவின் முக்கிய நகரங்களை அந்நாட்டு அரசுகள் முழுமையாக முடக்கி மக்களை கட்டாயத்தின் பேரில் வீட்டுக்குள்ளே அடைத்து வைத்து இல்லச்சிறைப்பிடிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததோடு அதனை நடைமுறைக்கும் கொண்டு வந்து வெற்றியும் ஈட்டியது.

இவ்வாறு சீன அரசாங்கம் மேற்கொண்ட அதிரடி கட்டளையை பார்த்து அந்நாட்டு மக்களின் சிவில் உரிமைகள் உட்பட மனித உரிமைகள் முழுமையாக மீறப்படுகின்றது என அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் சீனாவுக்கு எதிராக குரல் எழுப்பியது.

இவ்வாறு பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் இந்த கட்டளையை சீன அரசு நிறைவேற்றி சாதனைக்கண்டுள்ளது என்றே கூறவேண்டும்.

சீனாவுக்குப் பிறகு ஈரானே அதிக வைரஸ் தாக்குதலுக்கு உள்வாங்கப்பட்டது மத்திய கிழக்கு நாடுகளில் இந்த கொடிய கொவிட்-19 என்கிற வைரஸ் அதிகபடியாக தாக்கியது ஈரானையே ஆகும்.

ஈரானில் காணப்படுவது தெய்வீககோட்பாட்டோடு சம்பந்தப்பட்ட ஜனனாயகமாகும் ஆகையினால் ஈரானில் வைரலாக பரவிய வைரஸை தடுத்துக்கொள்வதற்கு அந்நாட்டு உயர் அதிகாரிகள் சுகாதார துறையை சார்ந்தவர்களின் பெரும் உதவியை நாடியதோடு பாதுகாப்பு துறையினரினதும்,காவல் துறையினரிதும உதவியை  முழுமையாக பெற்றுக்கொண்டிருந்தது.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்கா நிவ்யோரக்; நகர வைத்தியசாலை முழுவதும் நிரம்பி  நிர்க்கதியாக்கப்பட்டு காணப்பட்டதோடு தொற்றுக்குள்ளானவர்களையும் மரணித்தவர்கiளையும் வைப்பதற்கும் இடமில்லாமல் இருந்தப்போதும் கூட டொனல்ட் ட்ரம்ப் அவர்கள் எந்த மாற்று நடவடிக்கையும் எடுக்காதது கேள்விக் குறியாகவே உள்ளது. இத்தாலிக்கு பிறகு அமெரிக்காவே கொவிட் 19 இல் அடுத்தக்கட்டமாக அதிகளவு தாக்கப்போகின்றது  என்ற எதிர்வு கூறலை உலக சுகாதார மையம் அறிவித்திருந்தது என ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் அவர்களால் நியமிக்கப்பட்டிருந்த வைரஸ் ஒழிப்புக்குழுவின் தலைவர்,தொற்று நோய் ஒழிப்பு குழுவின் நிறைவேற்று அதிகாரி அன்டனி போஷிப் அவர்கள் சி.என்.என்.செய்திச் சேவைக்கு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் மட்டும் ஒரு இலட்சத்திற்கு மேலான மக்கள் பாதிப்புக்குள்ளாகி உயிரிழக்க நேரிடும் என பல்வேறுபட்டவர்களாலும் எதிர்வு கூறப்பட்டு வருகின்றது.அக் கொடிய வைரஸ் பரவலை   கட்டுப்படுத்த உலக முழுவதுமாக ஏரத்தாழ மூன்று பில்லியன் மக்கள் தங்களது வீட்டுக்குள்ளேயே சிறைவைக்கப்பட்டுள்ளனர் அத்தோடு தனிமைப்படுத்தவும் பட்டுள்ளனர்.உலக ஜனனாயக வரிசை நாடுகளிலே முக்கியமான நாடான எமது அயல் நாடு இந்தியாவும் தற்பொழுது பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி உள்ளது. தொடச்சியாக 21 நாட்கள் நாடளாவிய ரீதியில் தொடர் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அயராது பாடுபடுவது போற்றத்தகுந்தது.

உலக மக்களாகிய நாம் அனைவரும் தற்பொழுது இக்கட்டான பாரிய ஆபத்தினை ஏற்படுத்துகின்ற கால சூழ்நிலையில் சிக்கியுள்ளோம். ஆகவே மிக உன்னிப்பாக சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கின்றோம்.

ஏறத்தாழ மூன்று பில்லியன் மக்கள் வீட்டுக்குள்ளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், பெற்றோலிய வளங்களின் பயன்பாடு மிக குறைந்துள்ளது, வாகனங்களின் இரைச்சலிருந்து நாடு நிம்மதியாக இருக்கின்றது, நச்சு புகைகளின் அளவு குறைந்துள்ளது, இயற்கை தாய் பாதுகாக்கப்பட்டுள்ளாள்,வன விலங்குகள் நிம்மதியாக வாழ்கின்றன, விபத்துக்கள், உயிரிழப்புக்கள்,போட்டி,பொறாமை இன்மை என பல்வேறு நலன்களும் இதனால் ஏற்பட்டுள்ளன.

தனித்திருப்போம் கொரோ னாவை ஒழிப்போம் நாட்டைக் காப்போம்.

ஜயகுமார் ஷான், மொனறாகலை

Fri, 04/03/2020 - 15:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை