பாலமுனையில் கொவிட் - 19 நிவாரண பொருட்கள் கையளிப்பு

அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை அனைத்துப் பள்ளிவாயல்கள் மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் பாலமுனை கிளை ஆகியன இணைந்து சேகரித்த கொவிட் 19 நிவாரண பொருட்கள் பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டன.

பாலமுனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாயலின் ஏற்பாட்டில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை கையளிக்கும் நிகழ்வு பெரிய பள்ளிவாயல் தலைவர் எம். முஸம்மில் தலைமையில் இன்று (15) நடைபெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அகமட் நசீல், பாலமுனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி சேனநாயக, பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.எம். மிஹ்யார், பாலமுனை உலமா சபைத் தலைவர் அஸ்ஸெய்க் நிஸ்தார், செயலாளர் அஸ்ஸெய்க் எஸ். அன்வர் உட்பட பள்ளிவாயல்களின் தலைவர்கள், நிருவாகிகள் மற்றும் உலமா சபைப் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

கொவிட் 19 தாக்கம் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் வாழ்வாதாரம் பாதிப்புக்குள்ளாகிய, பாலமுனை கிராமத்திலுள்ள 6 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்குவதற்கென, பாலமுனை ஜூம்ஆப் பெரிய பள்ளிவாயலின் ஏற்பாட்டில், அனைத்து பள்ளிவாயல்களினாலும் சேகரிக்கப்பட்ட உலருணவுப் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கி வைக்கும் பொருட்டு உரிய பள்ளிவாயல் நிருவாகிகளிடம் பகிர்ந்தளிக்கப்பட்டன.

அரிசி, சீனி, பருப்பு, கோதுமை மா, சோயா, உருளைக் கிழங்கு அடங்கலான உலருணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் சுமார் 700 குடும்பங்களுக்கு வீடுகளுக்குச் சென்று வழங்கி வைக்கும் பொருட்டு இவ்வாறு கையளிக்கப்பட்டன.

(எம்.எப். றிபாஸ் - பாலமுனை தினகரன் நிருபர்)

Wed, 04/15/2020 - 10:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை