கொவிட் -19 நிதியத்தின் வைப்பு ரூ.866 மில்லியனாக அதிகரிப்பு

நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட்ட 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு தற்போது 866 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

மிஹிந்தலை ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய வலகாஹெங்குனு வௌ தம்மரத்ன தேரர் ஒரு மில்லியன் ரூபாவை நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.

களனி ரஜமகா விகாரை ஒரு மில்லியன் ரூபா, கதிர்காமம் ரஜமகாவிகாரை ஒரு மில்லியன் ரூபா, பம்பலப்பிட்டிய ஸ்ரீ வஜிராராம சங்கம் 96,000 ரூபா, சனச அபிவிருத்தி வங்கி 05 மில்லியன் ரூபா, வரையறுக்கப்பட்ட சனச காப்புறுதி நிறுவனம் ஒரு மில்லியன் ரூபா, அவுஸ்திரேலியா நிவ் சவுத் வேல்ஸிலுள்ள ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்கள் 05 மில்லியன் ரூபா, தொழில்சார் தொழிநுட்ப பல்கலைக்கழகம் 1.1மில்லியன் ரூபா, ஏ.டீ.ஆர்.சீ. லெனாட் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா, மகநெகும வீதி நிர்மாண இயந்திர உபகரணங்கள் நிறுவனம் ஆறு இலட்சத்து 61,000 ரூபா என நிதி  அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இலங்கை வங்கியின்   85737373 என்ற இலக்கத்தை கொண்ட கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டில் உள்ள எவரும் அன்பளிப்புகளை  அல்லது நேரடி  வைப்புகளை செய்ய முடியும்.

சட்டபூர்வமான கணக்கின் மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை வைப்பிலிட முடியும். 0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை தெரிந்துகொள்ள முடியும்.

Tue, 04/28/2020 - 06:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை