கொரோனா அச்சம்; மேலும் 14 நாடுகளுக்கு தடை விதித்தது ஜப்பான்

கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில்  ஜப்பான் அரசு மேலும் 14 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தடை விதித்துள்ளது.

கொரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு வேகமாக பரவி வருவதால்  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு  போக்குவரத்தை தடைப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாடும் சூழ்நிலைக்கு ஏற்ப  வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு தடை விதித்துள்ளது.

அவ்வகையில் 70 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் அந்த நாடுகளுக்கு சென்று வந்தவர்கள் ஜப்பானுக்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது ரஷ்யா  பெரு  சவுதி அரேபியா உள்ளிட்ட மேலும் 14 நாடுகள் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள்  அங்கு சென்று வந்தவர்கள் ஜப்பானுக்குள் நுழைய தடை விதித்து பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார். புதன்கிழமை முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.

Wed, 04/29/2020 - 10:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை