பாகிஸ்தானுக்கு 1.39 பில்லியன் டொலர் கடன் வழங்கியது சர்வதேச நிதியம்

கொரோனா வைரஸ் தாக்கியுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு சர்வதேச நிதியம் 1.39 பில்லியன் டொலர் கடன் வழங்கி உள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பிரதமராக இருந்து ஆட்சி செய்கிற பாகிஸ்தானில் கடும் நிதி நெருக்கடி நிலவுகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அங்கு தீவிரமாக பரவி வருகிறது. அங்கு 10 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு குறைந்த வட்டியில் விரைவான கடன் உதவி வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பிடம் பாகிஸ்தான் முறையிட்டது.

இந்த நிலையில், அந்த நாட்டுக்கு சர்வதேச நிதியம் 1.39 பில்லியன் டொலர் கடனாக வழங்கியது. இந்த கடன் உதவி, பாகிஸ்தான் ஸ்டேட் வங்கிக்கு வந்து சேர்ந்துள்ளது. இந்த தகவலை அந்த வங்கி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

இந்த தொகை பாகிஸ்தானின் அன்னிய செலவாணி கையிருப்பை பெருக்கிக்கொள்ளவும் உதவியாக இருக்கும் என்று அந்த நாட்டின் நாளேடு ஒன்று குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 10-ம் திகதி இதுவரை இல்லாத அளவுக்கு அன்னியச்செலாவணி கையிருப்பு 10.97 பில்லியன் டொலர் அளவுக்கு குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Sat, 04/25/2020 - 12:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை