இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 128 மில். அமெரிக்க டொலர்

இலங்கைக்கு 128.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அளிப்பதற்கு உலக வங்கி முன்வந்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான அவசர நிலைமைகள், சுகாதார நடவடிக்கைளுக்கு உதவி அளிக்கும் முகமாகவே குறித்த நிதி உதவி அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு குறித்த நிதி உதவி அளிப்பதற்கு உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் சபை நேற்று (02) ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நோய்க்கான அவசர நிலைமைகளின் போது நாட்டை தயார்படுத்தவும் உலக வங்கியானது, இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கி பணியாற்றுவதாக இலங்கை மற்றும் நோபாள், மாலைதீவிற்கான உலக வங்கியின் பணிப்பாளர்   Idah Z. Pswarayi-Riddihough  தெரிவித்துள்ளார்.

தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தவும் மக்களைப் பாதுகாக்கவும் இலங்கை ஏற்கெனவே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இலங்கைக்கான எமது ஆதரவு, பாதிப்புகளை குறித்து எதிர்கால அபாயத்திலிருந்து பாதுகாக்க உதவும் எனவும் அவர் தெரிவித்தார்.

Fri, 04/03/2020 - 12:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை