கொரோனாவுக்கு எதிரான போரில் இத்தாலியில் 100 டாக்டர்கள் மரணம்

கொரோனாவை கட்டுப்படுத்த போராடி வரும் இத்தாலியில், கொரோனா தொற்றுள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்த 100 டாக்டர்கள் இதுவரை மரணமாகியுள்ளனர். டாக்டர்கள், தாதிகள் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கொரோனாவுக்கு எதிராக போராடுவதாக அந்நாட்டு டாக்டர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

உலக அளவில் அதிக உயிர்பலி வாங்கி வரும் கொரோனா வைரஸ், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக இத்தாலியில் கொரோனா தாக்குதலில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 18,279 பேர் உயிரிழந்துள்ளனர். 1,43,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இத்தாலியில் கொரோனா சிகிச்சையில் ஈடுபடும் டாக்டர்கள் உயிரிழப்பு 100 ஐ கடந்துள்ளது என அந்நாட்டு பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே 30 மருத்துவ பணியாளர்கள், தாதிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இத்தாலி டாக்டர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் சுகாதாரதுறையில் பணியாற்றுகின்றனர். சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இனி எவ்வளவு நாள் தான், எங்கள் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், சுகாதார ஊழியர்களை, கொரோனாவுக்கு எதிராக போராட அனுப்புவது. சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவர்களை மருத்துவ பணிக்கு அனுப்புவது ஆயுதமின்றி போருக்கு செல்வதற்கு சமம்' இவ்வாறு வருத்தம் தெரிவித்துள்ளது.

Sat, 04/11/2020 - 12:10


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை