தலிபான்கள் 100 பேரை விடுவித்தது ஆப்கானிஸ்தான் அரசு

ஆப்கானிஸ்தான் சிறைகளில் இருந்த 100 தாலிபான் அமைப்பினரை அந்நாடு விடுதலை செய்துள்ளது.

அமைதிக்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக 100 தலிபான் கைதிகளை அவர்களின் உடல்நிலை, வயது மற்றும் மீதமுள்ள தண்டனையின் அடிப்படையில் விடுவித்ததாக தேசிய பாதுகாப்புச் சபையின் செய்தித் தொடர்பாளர் ஜாவித் பைசல் தெரிவித்துள்ளார்.

தாலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து சிறைகளில் உள்ள தங்கள் அமைப்பினரை விடுவிக்கவேண்டும் என தாலிபான்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதுதொடர்பாக கடந்த செவ்வாய்க்கிழமை ஆப்கானிஸ்தான் அரசுக்கும், தாலிபான்களுக்கும் நடுவே நடந்த பேச்சுவார்த்தையில் இருந்து தாலிபான்கள் இடைநடுவில் வெளியேறினர். இந்நிலையில் பல்வேறு சிறைகளில் இருந்த 100 தாலிபான் அமைப்பினரை ஆப்கானிஸ்தான் அரசு விடுதலை செய்துள்ளது.

Fri, 04/10/2020 - 09:49


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை