பிரபல ஹொலிவுட் தம்பதிக்கு வைரஸ்

ஒஸ்கர் விருது வென்ற பிரபல ஹொலிவுட் நடிகர் டொம் ஹெங்ஸ் மற்றும் அவரது மனைவி ரீட்டா வில்சன் இருவரும் கொவிட்–19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

63 வயது ஹெங்ஸும் அதே வயதான வில்சனும் அவுஸ்திரேலியாவில் இருந்தபோது காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். திரைப்படப் பணிகள் தொடர்பில் அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது ஹெங்ஸுக்கு வைரஸ் தொற்றியது உறுதியானது.

அவர்கள் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

உலக அளவில் பலரையும் பாதித்துள்ள கொவிட்–19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள முதல் ஹொலிவுட் பிரபலம் இவராவார்.

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை