ஆடை வாங்கச் செல்வதை தவிர்க்குமாறு கோரிக்கை

பண்டிகை காலத்திற்காக ஆடைகளை கொள்வனவு செய்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்வது கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்கு பெரும் உதவியாக அமையுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நிபுணத்துவ வைத்தியர் அனில் ஜாசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.  

ஆடைகள், உடுதுணிகள் போன்றவற்றை கொள்வனவு செய்யும் பொழுது விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் உடைகளைத் தொடுதல், கடைகளில் ஒன்று கூடுதல் அவற்றை அணிந்து பார்த்தல் என்பவற்றின் மூலம் நோய் பரவக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொது மக்களின் பாதுகாப்பு நடவடிக்கையாக, பெரும் எண்ணிக்கையில் பொது மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவர் பொது மக்களை கோரினார்.  

Tue, 03/17/2020 - 10:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை