மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனால் உலருணவுப் பொதிகள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனால் சுயதொழில் இன்றி வீட்டுக்குள் முடங்கிப்போன குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் வீடுகளில் சுயதொழில் இன்றி முடங்கியுள்ளனர்.இதனால்  கிராமப்புறங்களில் உள்ள குடும்பங்களின் நிலை பெரும் பாதிப்புக்குளாகியுள்ளது.இதனை கேட்டறிந்து கொண்ட மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் கிளையினர் அவர்களுக்கு மனிதபிமான அடிப்படையில் உதவும் நோக்கில் உலர் உணவுப்பொதிகளை வழங்கி வைத்தார்கள்.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களான மருதங்கேணிகுளம்,குஞ்சுக்குளம்  ஆகிய கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கான உலருணவுப் பொருட்களை நேற்று (30) மட்டக்களப்பு இராம கிருஸ்ண மிசன் குழுமத்தினர் வழங்கிவைத்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா மற்றும் கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலாளரின் அனுமதிக்கு அமைவாக குறித்த கிராமங்களில் உள்ள வறுமைப்பட்டு சுயதொழில் இழக்கப்பட்ட குடும்பங்களுக்கு இராமகிருஷ்ண மிஷன் சுவாமிகள் தலைமையிலான குழு நேரடி விஜயம் மேற்கொண்டு அங்குள்ள மக்களுக்கு உலருணவு பொதிகளை கையளித்தனர்.

(க.விஜயரெத்தினம் - வெல்லாவெளி தினகரன் நிருபர்)

Tue, 03/31/2020 - 10:41


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை