மட்டக்களப்பில் மண் சூறையாடல்; நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மணலை சில அரசியல்வாதிகளின் பெயரைக் கூறி தென் பகுதியினர் சூறையாடிச் செல்கின்றனர்.

இதற்கு எதிராக இன்று (04) தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் க.மோகன் தெரிவித்தார். 

மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர்கள் அமைப்பினரால் இது தொடர்பாக விளக்குவதற்கான ஊடகவியலாளர்களின் சந்திப்பு ஒன்று நேற்று அவ்வமைப்பின் பணிமனையில் இடம் பெற்றது.   இந்த மாவட்டத்திலிருந்து மணலை ஏற்றிச் செல்ல வேண்டாம்.

எமது மண்ணை கொள்ளையடிக்க வேண்டாம். ஆற்று படுகைகள் தோண்டப்படும் போதும் அந்த மண் ஏற்றிச் செல்லப்படும் போதும் ஆற்றின் நீர் வயல் நிலங்களுக்குள்ளும் கிராமத்திற்குள்ளும் சென்று விடும். இதனால், பாதிக்கப்படப்போவது அதற்கு அருகாமையிலுள்ள வயல் நிலங்களும் குடிமனைகளும்தான்.   அது மட்டுமன்றி நூற்றுக் கணக்கான மணல் லொறிகள் ஒரே பாதையில் தொடர்ச்சியாக மணலோடு பயணிப்பதால் அந்தப் பாதை குண்டும் குழியுமாகிப் பாதசாரிகள் நடப்பதற்கு கூட உகந்ததாக இல்லை.   இன்று நடக்கவிருக்கின்ற அடையாள உண்ணாவிரத போராட்டமானது தென் பகுதி அமைச்சர்களுக்கும் ஏனைய பிரதானிகளுக்கும் எமது நிலையை எடுத்துக் கூறும் என நினைக்கிறேன்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இவ் விடயத்தில் அதீத அக்கறை காட்டி இந்த மண் மாபியாக்களை உடன் நிறுத்த வேண்டும் என்பதே எமது கோரிக்கை எனவும் அவர் தெரிவித்தார்.

புளியந்தீவு குறூப் நிருபர்    

Wed, 03/04/2020 - 11:21


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை