மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அச்சம்

கொரோனா வைரஸ் காரணமாக சில மருந்துகளின் ஏற்றுமதியை இந்தியா மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சில பொதுவான மருந்துகளுக்கு சர்வதேச அளவில் தட்டுப்பாடுகள் ஏற்படும் அச்சம் அதிகரித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய பொதுவான மருந்துகளின் விநியோக நாடான இந்தியா 26 மூலப்பொருட்கள் மற்றும் மருந்து ஏற்றுமதிகளுக்கு கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.

இதில் உலகில் பரவலாக பயன்படுத்தப்படும் வலி நிவாரணியான பரசிடமோல் மருந்தும் இவ்வாறாக கட்டுப்பாட்டுக்கு உட்பட்டுள்ளது. சீனாவில் பல மூலப்பொருள் உட்பத்திகளும் நிறுத்தப்பட்டு தடைப்பட்டிருக்கும் நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் 70 வீதமான மருந்து உற்பத்திகள் சீனாவின் மூலப்பொருட்களிலேயே தங்கியிருக்கும் நிலையில் அந்த மூலப்பொருட்கள் தீர்ந்து வருகின்றன. இந்த வைரஸ் தொற்று தொடர்ந்து தீவிரம் கண்டால் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எனினும் இந்த அறிவிப்புப் பற்றி அமைதி காக்கும்படி குறிப்பிட்டிருக்கும் இந்திய அரசு அடுத்த மூன்று மாதங்களுக்கு போதுமாக கையிருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஏற்றுமதிக்கு தடை செய்யப்பட்டுள்ள 26 மருத்துகள் இந்தியாவின் ஒட்டுமொத்த மருந்து ஏற்றுமதியில் 10 வீதம் ஆகும்.

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை