அமெரிக்காவை ஆக்கிரமிக்கும் கொரோனா

உலக அளவில் கோவிட் -19 என்ற கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று வரை 24,089 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 2791 பேர் உயிரிழந்தனர். எனவே நேற்றுக் காலைக்குள் உயிரிழப்பு 24089 ஆக அதிகரித்து விட்டது.

கொரோனா தொற்று நோய்த் தாக்கத்தால் இத்தாலியில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 683 பேரும் ஸ்பெயினில் 655 பேரும் பலியாகி உள்ளனர். சீனாவைத் தொடர்ந்து இத்தாலியில்தான் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக இருந்து வருகிறது.

இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை நேற்று வரை 7,503 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கடந்த செவ்வாய்க்கிழமையன்றுதான் அதிக பட்சமாக ஒரே நாளில் 743 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயின் நாட்டிலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த சில நாட்களாக ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது. ஸ்பெயினில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 718 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். ஸ்பெயினில் கொரோனாவால் பலியானோர் மொத்த எண்ணிக்கை நேற்று 4,089 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது இத்தாலி, ஸ்பெயின் நாடுகளை விட அமெரிக்காவிலும் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.   இதனிடையே இங்கிலாந்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 100-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனையடுத்து இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 578 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் இங்கிலாந்தில் பாதிக்கப்பட்டோர் 11,658 பேர்.

  உலகம் முழுவதும் கோவிட் 19 என்ற கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. நேற்றுக் காலை நிலைவரப்படி 5,32,63 பேர் இந்த ஆட்கொல்லி நோயால் பாதிக்கப்பட்டனர். இதில் 24,090 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் 124349 பேர் குணமாகி உள்ளனர். இரண்டாவது இடத்தில் உள்ள சீனாவில் 81299 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3287 பேர் இறந்தனர். மூன்றாவது இடத்தில் உள்ள இத்தாலியில் 80595 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 8215 பேர் இறந்துள்ளனர். 4வது இடத்தில் உள்ள ஸ்பெயினில் 56347 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர், 4154 பேர் இறந்துள்ளனர். இந்த நான்கு நாடுகளில் மட்டும் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 2791 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக ஸ்பெயினில் 718 பேர் உயிரிழந்தனர். இத்தாலியில் 712 பேர் உயிரிழந்தனர். பிரான்சில் நேற்று 365 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் நேற்று 237 பேர் உயிரிழந்தனர். ஈரானில் 157 பேரும், இங்கிலாந்தில் 115 பேரும், நெதர்லாந்தில் 78 பேரும் இறந்தனர். இதேபோல் ஜெர்மனியில் நேற்று 61 பேரும், பெல்ஜியத்தில் 42 பேரும், சுவிட்சர்லாந்தில் 39 பேரும், இந்தோனேசியாவில் 20 பேரும், ஆஸ்திரியாவில் 18 பேரும், பிரேசில் நாட்டில் 18 பேரும், போர்த்துக்கல் நாட்டில் 17 பேரும், துருக்கியில் 16 பேரும், சுவீடனில் 15 பேரும், அயர்லாந்து நாட்டில் 10 பேரும் இறந்தனர்.

நேற்றுமுன்தினம் இந்தியாவில் ஒரே நாளில் 8 பேர் இறந்தனர். கொரோனா வைரஸ் நோய்க்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் வயதானவர்கள், உடலில் ஏற்கனவே பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் எமனாக உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று சமூக தொற்றாக மாறவில்லை. இதனால் சமூக தொற்றாக மாறாமல் தடுப்பதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கை கடைப்பிடித்து 21 நாட்கள் வீட்டிலேயே இருந்தால் இந்தியாவே காப்பாற்றப்படும் என்பதால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த அரசு முயன்று வருகிறது. மக்கள் அரசின் உத்தரவை கடைப்பிடிக்காவிட்டால் அமெரிக்கா, இத்தாலி நிலைமை இந்தியாவுக்கும் ஏற்படும் என மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

கொரோனா தொற்று நோய் பாதிப்பில் உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் அதிகமாக உள்ளது. சீனாவில் இருந்து புறப்பட்ட கொரோனா தொற்று நோய் உலகின் 190 நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. இந்த நூற்றாண்டில் மனித குலத்துக்கு பேரழிவை ஏற்படுத்தும் தொற்று நோயாக கொரோனா உருவெடுத்து நிற்கிறது. தற்போது கொரோனாவால் அமெரிக்காதான் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் சுமார் 85,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் 81,782 பேரும் இத்தாலியிலும் 80,500 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 237 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவுக்கு இதுவரை மொத்தம் 1,186 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில்தான் மிக அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்நகரத்தில் இதுவரை 385 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயோர்க் நகரில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 100க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர்.

சைனீஸ் வைரஸ்...இதுதான் கொரோனா வைரசுக்கு  ட்ரம்ப் வைத்த பெயர். சீனாவில் கொரோனா வைரஸ் வந்ததில் இருந்தே சீனாவை மிக மோசமாக விமர்சனம் செய்து வந்தவர்தான் ட்ரம்ப். 'சீனாவிற்கு கொரோனாவை கட்டுப்படுத்த தெரியவில்லை. நாங்கள் என்றால் கொரோனவை எளிதாக வென்று இருப்போம்'  என்று கூறினார்.

ஆனால் தற்போது அதே அமெரிக்காதான் சீனாவை விட மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் தற்போது அமெரிக்கா மூன்றாம் இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 68,581 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த மாத தொடக்கத்தில் அங்கு வெறும் 80 பேர்தான் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு இருந்தனர் . மாதம் முடிவதற்குள் தற்போது அங்கு 60 ஆயிரத்திற்கும் அதிகமான நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு இதுவரை 1,186 பேர் பலியாகி உள்ளனர்.

 நியூயார்க்கில்  அதிகமானோருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 33,013 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 366 பேர் பலியாகி உள்ளனர். அடுத்து நியூ ஜெர்சியில் 4,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அங்கு பலி எண்ணிக்கை 62 ஆகும். அதேபோல் கலிபோர்னியாவில் 3,158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 67 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளை மாளிகை இருக்கும் வோஷிங்டனில் 2,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 132 பேர் பலியாகி உள்ளனர். கொரோனா காரணமாக அமெரிக்காவின் பொருளாதாரம் மிக மோசமான சரிவை சந்தித்து வருகிறது. இந்த மாத இறுதியில் அங்கு 1 மில்லியன் மக்கள் கலிபோர்னியாவில் மட்டும் வேலையை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேபோல் தினமும் பணிக்கு செல்லும் நபர்களில்   பாதிப் பேர் நியுயோர்க்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு தினமும் சந்தை மிக மோசமான சரிவை சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. பொருளாதார ரீதியாக சீனாவை விட அமெரிக்காதான் மோசமாக இருக்கிறது. தற்போது கொரோனா பாதிப்பை எடுத்துக் கொண்டால், சீனாவை விட மோசமான நிலையை அமெரிக்கா சந்தித்துள்ளது. அமெரிக்காவில் ஒரு நாளுக்கு சராசரியாக 800 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். இது சீனாவை விட குறைவு. சீனாவில் ஒரு நாளுக்கு அதிகமாக 40 பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

சீனா, இத்தாலியில் இது குறைகிறது, ஆனால் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால் அங்கு 428 பேர்தான் இதில் குணப்படுத்தப்பட்டுள்ளனர். இது மற்ற நாடுகளை விட மிகவும் குறைவு ஆகும். இதற்கு காரணமாக அமெரிக்காவின் மோசாமான சுகாதார கொள்கைதான் என்கிறார்கள். வெளியே வல்லரசு நாடு என்று சொல்லிக் கொண்டு திரிந்தாலும், அந்த நாட்டின் கட்டமைப்பு முக்கியமாக மருத்துவத்தில்  நிறைய குறைகள் உள்ளன. இதுதான் அங்கு கொரோனாவால் பலிகள் அதிகரிக்கக் காரணம் ஆகும். அமெரிக்கா இராணுவத்திற்கும் அது தொடர்பான ஆராய்ச்சிக்கும் ஒதுக்கிய நிதியில் பாதியை கூட பொது சுகாதாரத்திற்கு ஒதுக்கவில்லை. இதுதான் அங்கு தற்போது கொரோனா சமயத்தில் எதிரொலித்துள்ளது.

அங்கு கொரோனா காரணமாக மருத்துவனையில் ஒரே ஒரு கட்டிலுக்கு 7 பேர் போட்டியிடும் நிலை உள்ளது. அடுத்த மாதம் இது எட்டாக உயரும் என்று கூறுகிறார்கள். அங்கு கொரோனா காரணமாக இதுவரை 18 மருத்துவர்கள் பலியாகி உள்ளனர். இதெல்லாம் சேர்த்து ட்ரம்பிற்கு சிக்கல் மேல் சிக்கலாக மாறியுள்ளது. கொரோனாவை குறைத்து மதிப்பிட்டது , தற்போது அதை எதிர்கொள்ள முடியாமல் திணறுவது. கொரோனாவிற்கு எதிராக நாட்டை தயார் செய்யாதது, இப்போதும் முழு ஊரடங்கை பிறப்பிக்காதது. ஈஸ்டர் வந்தால் கொரோனா சரியாகும் என்றது என்று ட்ரம்ப் தற்போது தொட்டதெல்லாம் சர்ச்சையாக முடிகிறது.

இதெல்லாம் போக சீனாவை தேவையில்லாத நேரத்தில் ட்ரம்ப் எதிர்த்து வருகிறார். கொரோனா குறித்து எல்லோரையும் விட சீனர்களுக்குத்தான் அதிகம் தெரியும். அவர்களின் உதவி இப்போது அவசியம். உலகமே ஒற்றுமையாக இருக்க வேண்டிய நேரத்தில், சீனாவை மிக மோசமாக பகைக்க தொடங்கி இருக்கிறார் ட்ரம்ப். அமெரிக்காவின் சரியும் பொருளாதாரத்தில் இதில் மேலும் எண்ணெயை ஊற்றி இருக்கிறது. இந்த நிலையில்தான் இதே வேகத்தில் அமெரிக்காவில் கொரோனா பரவினால் அங்கு பலி எண்ணிக்கை அதிகரிக்கும். இத்தாலி தொடக்கத்தில் இருந்தது போல அமெரிக்கா இப்போது மாறியுள்ளது . அமெரிக்காவில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. இப்படியே போனால் சீனாவை, இத்தாலியை அமெரிக்கா எளிதாக முந்த வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிலையத்தின் செய்தி தொடர்பாளர் ஹாரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Sat, 03/28/2020 - 16:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை