அரசியல் தலைவர்களிடம் பரவும் கொரோனா வைரஸ்

பிரிட்டன் சுகாதார அமைச்சர் நடீன் டொரிஸ் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கடந்த வியாழக்கிழமை அவருக்கு நோய் அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து நடீனை சந்தித்த நபர்களை அழைத்து அவர்களையும் பரிசோதிக்க உள்ளதாகப் பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

எனினும் உலகில் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட முதல் அரசியல்வாதி இவரல்ல. இந்த வாரம் பிரான்ஸ் கலாசார அமைச்சர் பிரான்க் ரியின்ஸ்டர் நோய்த்தொற்றுக்கு உள்ளானதை அடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக பிரான்ஸ் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

பிரான்ஸில் ஐந்து பாராளுமன்ற உறப்பினர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

இத்தாலி ஜனநாயகக் கட்சி தலைவர் நொகலா நிகொலா சின்கரட்டிக்கு வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து கடந்த வாரம் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இதில் ஈரானிய அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸினால் இரு அரசியல்வாதிகள் உயிரிழந்ததோடு உயர்மட்டத் தலைவர் ஆயதுல்லாஹ் அலி கமனெயின் முன்னணி ஆலோசகர் முஹமது மிர்முஹமதி உயிரிழந்தார்.

ஈரானில் 20க்கும் அதிகமான அரசியல்வாதிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டவருடன் இருந்த அமெரிக்காவின் ஐந்து குடியரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை