ஐரோப்பாவை நோக்கி அகதிகள் படையெடுப்பு

சிரிய அகதிகளை தொடர்ந்தும் சமாளிக்க முடியாது என ஐரோப்பாவுக்கான வாயிலை துருக்கி திறந்துவிட்டிருக்கும் நிலையில் மேலும் 2,000 குடியேறிகள் துருக்கியின் கிரேக்க நாட்டு எல்லைப் பகுதியை அடைந்துள்ளனர்.

கடந்த வாரம் வட மேற்கு சிரியாவில் பல டஜன் துருக்கி துருப்புகள் கொல்லப்பட்ட நிலையில் சிரிய அரச படை மீது துருக்கி தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. இந்த மோதல் தொடர்பில் ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே துருக்கி தமது எல்லையை திறந்துவிட்டுள்ளது.

பெண்கள், சிறுவர்கள் என சுமார் 2000 குடியேறிகள் ஸ்தான்பூலில் இருந்து நேற்றுக் காலை பசர்கூலா எல்லை வாயிலை நோக்கி பயணித்து வருவதாக ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்தக்கு குழுவில் ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக் நாட்டவர்கள் உள்ளனர்.

ஏற்கனவே ஆயிரக்கணக்கானவர்கள் எல்லையை எட்டி இருப்பதோடு அவர்கள் கடும் குளிருக்கு மத்தியில் தீப்பந்தங்களை மூட்டி அங்கு தரித்துள்ளனர்.

எல்லையை கடப்பதை கிரேக்கம் தடுத்த நிலையில் எல்லையின் மறுபக்கம் இருக்கும் கிரேக்க பொலிஸ் கார் வண்டி ஒன்றின் மீது சிறு எண்ணிக்கையிலான குடியேறிகள் குழு ஒன்று கல்வீதி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்நிலையில் 76,358 குடியேறிகள் பசர்கூலாவை நோக்கி எட்ரின் மாகாணத்தின் வழியாக துருக்கில் இருந்து வெளியேறியிருப்பதாக துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லு ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

வடமேற்கு துருக்கியின் எர்டின் மாகாணமானது கிரேக்க மற்றும் பல்கேரிய நாட்டு எல்லையை ஒட்டி அமைந்துள்ளது.

துருக்கி அண்மைய ஆண்டுகளில் 3.6 மில்லியன் சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கி இருப்பதோடு ஆப்கானியர்களும் அந்நாட்டில் அடைக்கலம் பெற்றிருக்கும் நிலையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Mon, 03/02/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை