இஸ்ரேல் எதிர்க்கட்சி தலைவர் ஆட்சி அமைப்பதற்கு அவகாசம்

இஸ்ரேலில் கடந்த ஓர் ஆண்டாக நீடிக்கும் அரசியல் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்து புதிய அரசொன்றை அமைப்பதற்கான வாய்ப்பை ஜனாதிபதி, எதிர்க்கட்சித் தலைவர் பென்னி கான்ட்ஸுக்கு வழங்கியுள்ளார்.

இது இஸ்ரேல் வரலாற்றில் நீண்ட கால பிரதமராக நீடித்து வரும் பென்ஜமின் நெதன்யாகுவுக்கு பின்னடைவாக உள்ளது.

120 ஆசனங்கள் கொண்ட இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான 61 உறுப்பினர்கள் ஆதரவளித்ததை அடுத்தே முன்னாள் இராணுவத் தளபதியான கான்ட்ஸுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு காட்ஸுக்கு ஆதரவு அளித்த அரசியல் கட்சிகளில் நெதன்யாகுவை எதிர்க்கும் அரபுக் கூட்டணியும் உள்ளடங்குகிறது.

இதன்படி அவருக்கு ஆட்சி அமைப்பதற்கு 42 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தாம் தொடர்ந்து பிரதமராக நீடிப்பதாக நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலில் கடந்த ஓர் ஆண்டுக்குள் மூன்று பொதுத் தேர்தல்கள் இடம்பெற்ற நிலையில் எந்தத் தரப்புக்கும் ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை இல்லாததால் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்தக் காலப்பிரிவில் நெதன்யாகு தொடர்ந்து பிரதமராக இருந்து வருகிறார்.

Tue, 03/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை