ஐ.நா முன்னாள் பொதுச் செயலாளர் குலர் மரணம்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளரும் பெரு நாட்டின் முன்னாள் பிரதமருமான ஜவியர் பெரஸ் டி குலர் தனது 100 ஆவது வயதில் மரணமடைந்தார்.

பெருவில் இருக்கும் தனது வீட்டில் பெரஸ் டி குலர் மரணித்ததாக அவரது மகன் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா பொதுத் செயலாளராக இரண்டு தவணைகள் பதவி வகித்த அவர் லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் பல அமைதி உடன்படிக்கைகளுக்கும் காரணமாக இருந்துள்ளார்.

இதில் ஈரான் மற்றும் ஈராக்கிற்கு இடையிலான எட்டு ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து 1988 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை அவரது முக்கிய அடைவாக பார்க்கப்படுகிறது. அவரது மரணச் செய்தி ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியதாக ஐ.நாவின் தற்போதைய பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் சோவிட் ஒன்றியத்திற்கு இடையிலான பதற்றம் கொண்ட பனிப்போர் காலத்தில் 1981 ஆம் அண்டு ஐ.நாவின் ஐந்தாவது பொதுச் செயலாளராக பெரஸ் டி குலர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை