சாந்த மரியா பெண்கள் கல்லூரி இல்ல விளையாட்டு போட்டி

கொழும்பு 3, கொள்ளுப்பிட்டி சாந்த மரியா பெண்கள் கல்லூரி ஒழுங்கு செய்த இல்ல விளையாட்டு போட்டி கொள்ளுப்பிட்டி ஸ்டான்லி ஜான்ஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மயூர இல்லத்தின் தலைவி பாத்திமா பிக்ரா பர்சான் கல்லூரி அதிபர் திருமதி உபேந்திர லக்மலியிடமிருந்து வெற்றிக் கிண்ணத்தை பெற்று கொண்டார்.

இந் நிகழ்வில் கல்வி பணிப்பளார் ஜி. என் . சில்வா , விளையாட்டு வீரர் டிலந்த மாலகமுவ, ஆகியோரும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி வைத்தனர்.

மயூர இல்லத்தின் பொறுப்பாசிரியர் சங்ஜிவிக்கா மனோகரி , விளையாட்டு பொறுபாசிரியர் கலைச்செல்வி மற்றும் விளையாட்டு தலைவி பாத்திமா நஷாத் நசார்டீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ருஸைக் பாரூக்

Sat, 03/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை