ஐரோப்பியர்களுக்கு அமெரிக்கா ஒரு மாத பயணக் கட்டுப்பாடு

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ஐரோப்பாவுக்கான புதிய பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

26 ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு இந்தப் பயணக் கட்டப்பாடு விதிக்கப்பட்டபோதும் பிரிட்டனுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் 460 வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளை மாளிகையில் இருந்து டிரம்ப் கடந்த புதனன்று விடுத்த அறிவிப்பில், ஒரு மாத காலம் கொண்ட இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை (இன்று) நள்ளிரவுடன் அமுல்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார். வெளிநாட்டு வைரஸ் தொற்று ஒன்றை கட்டுப்படுத்துவதில் ஐரோப்பா விரைவாக செயல்பட தவறியதாக குற்றம்சாட்டிய டிரம்ப் ஐரோப்பிய பயணிகளால் இந்த வைரஸ் அமெரிக்காவில் விதைக்கப்பட்டதாக குறிப்பிட்டார். “சீனாவில் முன்கூட்டிய செயற்பாட்டுடன் நாம் உயிர்காக்கு நடவடிக்கையை எடுத்தோம். தற்போது ஐரோப்பாவிலும் நாம் அதனைச் செய்ய வேண்டி உள்ளது” என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

அமெரிக்காவெங்கும் தற்போது 1,135 கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை