தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு வீட்டை கையளித்த சுசந்த புஞ்சிநிலமே

தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு வீட்டை கையளித்த சுசந்த புஞ்சிநிலமே-Susantha Punchi Handed Over His House for Quarantine Purpose

கிருமிநாசினி தெளிகருவிகளும் கையளிப்பு

திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா நோய் அறிகுறிகள் காணப்படும் நோயாளர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக திருகோணமலை மாவட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே தமது வீட்டை வழங்கியுள்ளார்.

திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. பிரேமானந்திடம் இன்று (25) இவ்வீடு கையளிக்கப்பட்டது.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு வீட்டை கையளித்த சுசந்த புஞ்சிநிலமே-Susantha Punchi Handed Over His House for Quarantine Purpose

இதேவேளை பொது இடங்களில் தொற்று நீக்கும் விடயங்களை மேற்கொள்ளும் நோக்கில் அவரது சொந்த நிதியுதவியுடன் கிருமி நாசினி தெளிகருவிகளையும் வழங்கி வைத்தார்.

அனைத்து பிரதேச சபைகளுக்கும் இக்கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு வீட்டை கையளித்த சுசந்த புஞ்சிநிலமே-Susantha Punchi Handed Over His House for Quarantine Purpose

அத்துடன் திருகோணமலை, கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கும்  கிருமி நாசினி தெளி கருவி வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச சபைகளின் தலைவர்கள், மற்றும் சுகாதார சேவைகள் திணைக்களத்தின் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு வீட்டை கையளித்த சுசந்த புஞ்சிநிலமே-Susantha Punchi Handed Over His House for Quarantine Purpose

கடந்த அமைச்சரவையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக சுசந்த புஞ்சி நிலமே செயற்பட்டார்.

(அப்துல்சலாம் யாசீம்)

Wed, 03/25/2020 - 14:00

from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக