யானையா, அன்னமா, தொலைபேசியா?; சின்னத்தில் பிரச்சினை

யானையா, அன்னமா, தொலைபேசியா?; சின்னத்தில் பிரச்சினை-யானையா, அன்னமா, தொலைபேசியா; சின்னத்தில் பிரச்சினை-Samagi Jana Balawegaya Inauguration

ஐக்கிய மக்கள் சக்தி அங்குரார்ப்பணம் இன்று

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் அங்குரார்ப்பணம் நிகழ்வு இன்று (02) கொழும்பு தாமரைத் தடாகம் அரங்கில் இடம்பெறுகின்றது.

இதேவேளை நேற்று (01) நடைபெற்ற ஐ.தே.க. செயற்குழு கூட்டம், எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் சின்னம் தொடர்பில் எவ்வித முடிவுமின்றி நிறைவடைந்துள்ளதாக, சஜித் பிரேமதாஸவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், புதிய கூட்டணிக்கு யானை சின்னம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சில தரப்பினரால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தில் உண்மையில்லை எனவும், அதை நிராகரிப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றைய செயற்குழு கூட்டத்தில், எதிர்வரும் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சஜித் பிரேமதாஸ ஆதரவு அணியினர் எதிர்ப்பு வெளியிட்டதாக தெரிவிக்கப்படுவதோடு, இதன்போது, தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் யோசனையொன்றும் அவர்களால் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.தே.க.வின் செயற்குழு கூட்டம் நேற்றையதினம், கட்சியின் தலையமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது. இரவு 7.15 மணியளவில் ஆரம்பமான இக்கூட்டம் சுமார் 3 மணி நேரம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Mon, 03/02/2020 - 10:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை