ஆப்கான் போர் குற்ற விசாரணைக்கு ஒப்புதல்

ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா மற்றும் ஏனைய நாடுகள் மேற்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணையை தடுக்கும் அந்த நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை அது திரும்பப் பெற்றுள்ளது.

இதன்படி 2003 மே மாதம் தொடக்கம் தலிபான்கள், ஆப்கான் அரசு மற்றும் அமெரிக்க துருப்புகளின் செயற்பாடுகள் ஆய்வுக்கு உட்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இணையாத நிலையில் அதன் அமெரிக்க பிரஜைகள் மீதான அதிகாரித்தை அமெரிக்க அங்கீகரிப்பதில்லை. எனினும் ஆப்கானிஸ்தான் அந்த நீதிமன்றத்தின் உறுப்பு நாடாக உள்ளது.

ஆப்கானிஸ்தானில் சி.ஐ.ஏ மூலம் நடத்தப்பட்ட இரகசிய தடுப்பு முகாம்களில் அமெரிக்க இராணுவம் சித்திரவதைகளில் ஈடுபட்டது தொடர்பில் நம்பும் நியாயமாக அடிப்படைகள் இருப்பதாக 2016 ஆம் ஆண்டின் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்களும் போர் குற்றங்களில் ஈடுபட்டதை நம்புவதற்கான நியாயங்கள் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை