தனிமைப்படுத்தலுக்காக பயன்படுத்திய பஸ் விபத்து

கொரியாவிலிருந்து வருகை தந்த இலங்கையர்களை தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக கட்டுநாயக்கவிலிருந்து வவுனியாவிற்கு ஏற்றிக் கொண்டு சென்று விட்டு திரும்பிய இராணுவத்தினருக்கு சொந்தமான பஸ் வண்டியொன்று இன்று (14) காலை விபத்திற்குள்ளானது.

குறித்த பஸ் வண்டியானது ஏ-9 வீதியில் கெக்கிராவை ஹொராபொல சந்தியில் விபத்திற்குள்ளானது.

குறித்த விபத்து இடம்பெற்ற வேளையில் பஸ் வண்டியினுள் சாரதி மாத்திரமே இருந்துள்ளதோடு, சாரதிக்கு ஏற்பட்ட உறக்க களைப்பினால் பஸ் வீதியை விட்டு விலகிச் சென்று விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பஸ் வண்டியானது தொலைபேசி கம்பமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளானது.

வவுனியா பம்பைமடு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொரியாவிலிருந்து வந்த இலங்கையர்கள் 36 பேர் குறித்த பஸ் வண்டியில் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இவர்களை அங்கு கொண்டு சென்று விட்டு திரும்புகையிலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கெக்கிராவ பொலிஸ் போக்குவரத்து பிரிவினரும் இராணுவத்தினரும் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

 

 

Sat, 03/14/2020 - 12:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை