ஊரடங்கின் போது மருந்தகங்களை திறக்க முடிவு

ஊரடங்கின் போது மருந்தகங்களை திறக்க முடிவு-Opening Pharmacies During Curfew

ஊரடங்கு வேளையிலும் மருந்தகங்களை திறந்து வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, நாளாந்தம் வைத்திய நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் மூலம் மருந்துகளை பெற்றுக் கொள்வதில், பெரும்பாலான நோயாளிகள் சிரமத்தை எதிர் கொண்டுள்ளதால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சினால் விசேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேவைக்கேற்ற வகையில், நாடு முழுதிலும் உள்ள அனைத்து மருந்தகங்களையும் திறக்க அனுமதிக்குமாறு, சுகாதார அமைச்சினால், பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், நோயாளியின் நோய் நிலை மற்றும் மருந்துச்சிட்டை ஆகியவற்றை, ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக கருதுமாறு சுகாதார அமைச்சு பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதற்காக மருந்தக ஊழியர்களுக்கும் மருந்துப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கும் அனுமதி வழங்குமாறு சுகாதார அமைச்சகம் பதில் பொலிஸ் மாஅதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tue, 03/24/2020 - 18:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை