சுற்றுலாத்துறையில் பாரிய உள்நாட்டு, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க திட்டம்

சுற்றுலாத்துறையில் பாரிய முதலீடுகளை உள்ளீர்க்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.இதற்கமைய வெளிநாட்டு, உள்நாட்டு முதலீடுகளை இந்த ஆண்டுக்குள் ஈர்ப்பதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் 30இற்கும் அதிகமான முதலீடுகள் உள்ளீர்க்கப்படும். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சுமார் 122 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை நேரடி முதலீடுகளை எதிர்பார்க்கப்படுகிறது.  

இலங்கை முதலீட்டு சபை உட்பட துறைசார் உயர் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,  

நாட்டின் சுற்றுலாத்துறையை கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. சுற்றுலாத்துறைக்கு மீள புத்துயிர் கொடுக்கும் விதத்தில் பல சலுகைகளையும் அரசாங்கம் வழங்கிவருகிறது. இலங்கை முதலீட்டு சபையுடன் இணைந்ததான பல முதலீடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. இவ்வாண்டு இறுதிக்குள் சுமார் 30 முதலீடுகள் வரை சுற்றுலாத் துறையில் மேற்கொள்ளப்படும். அவற்றின் பெறுமதி 122 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும்.  

புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் ரூபா 66,250 மில்லியன் (370 மில்லியன் அமெரிக்க டொலர்) வரை முதலீடுகளை மேற்கொள்ள விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வேலைத்திட்டங்களின் கீழ் 550 சுற்றுலா அறைகள் அமைக்கப்பட்டு, வாடி வீடுகளும் அமைக்கப்படவுள்ளன.

அதேபோன்று மேலும் 4,140 மில்லியன் பெறுமதியான சுற்றுலா அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து முதலீட்டு சபையுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Thu, 03/05/2020 - 09:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை