ஆப்கானில் இரு ஜனாதிபதி பதவியேற்புகளுக்கு அழைப்பு

ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி மற்றும் அவரது போட்டியாளரான அப்துல்லாஹ் அப்துல்லாஹ் இருவரும் ஜனாதிபதி பதவியேற்பு விழாக்களுக்கு பிரத்தியேகமான அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளனர்.

“பதவிப்பிரமாணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதோடு அனைத்து தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கும் நாம் அழைப்பு விடுத்திருக்கிறோம்” என்று அப்துல்லாஹ்வின் பேச்சாளர் பிரைதூன் க்வாசு தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று காலை கானி ஜனாதிபதி பதவியை ஏற்கும் அதே நேரத்தில் காபுலில் அப்துல்லாஹ்வும் ஜனாதிபதி பதவி ஏற்பு நிகழ்வை நடத்தவுள்ளார். ஆப்கானில் நீடிக்கும் அரசியல் இழுபறி காரணமாக அந்நாட்டில் இரு போட்டி அரசுகள் ஏற்பட்டிருப்பதோடு இது அந்நாட்டின் அமைதி முயற்சிக்கும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கானி வெற்றி பெற்றதாக ஆப்கான் தேர்தல் ஆணைக்குழு கடந்த பெப்ரவரி மாதம் அறிவித்தபோதும் தாமே அந்தத் தேர்தலில் வென்றதாக அப்துல்லாஹ் சுயமாக அறிவித்துக் கொண்டதோடு தாம் அரசமைக்கப்போவதாகவும் குறிப்பிட்டார்.

Mon, 03/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை