ராம் கராத்தே சங்கத்தின் பயிற்சி பட்டறையும் ஒன்று கூடலும்

ராம் கராத்தே சங்கத்தின் பயிற்சி பட்டறையும் ஒன்று கூடலும் அக்கரைப்பற்று தர்மசங்கரி மைதானத்தில் அமைந்துள்ள உள்ளக விளையாட்டரங்கில் (14) ஆம் திகதி நடைபெற்றது.

ராம் கராத்தே சங்கத்தின் சிரேஷ்ட போதானாசிரியரும், ஆலோசகரும், கிழக்கு மாகாண ராம் கராத்தே சங்கத்தின் தலைவரும், அரசினால் வழங்கப்படும் தற்காப்பு கலைக்கான கலாபூசண விருது பெற்றவருமான சிகான் கே.கேந்திரமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற பயிற்சிப் பட்டறையில் சிரேஷ்ட ஆசிரியர்கள் கனிஸ்ட கறுப்பு பட்டி வீரர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் ஜப்பான் கராட்டி மரியோசிக்காய் சங்கத்தின் பிரதம போதனாசிரியரும் தலைவரும் மறைந்த மாமனிதருமாகிய சிகான் கே.இராமச்சந்திரனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட்டதுடன் சம்மாந்துறையில் கடந்த 7ஆம் திகதி நடைபெற்ற அம்பாரை மாவட்ட கராத்தே சுற்றுப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு அங்கு 67 கிலோ குமிற்றி போட்டியில் தங்கம் வென்ற பிறவுண் பட்டி தரத்தில் உள்ள மாணவனான எம்.எஸ்.எம்.பைனாஸ் பிரதம போதனாசிரியர் சிகான் கே.கேந்திரமூர்த்தியினால் கறுப்பு பட்டி வீரராக தரமுயர்த்தப்பட்டார். நிகழ்வில் ஐக்கிய ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சென்சி கே.ரவிச்சந்திரன், இலங்கை ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் கே.குககுமாரராஜா ராம் கராத்தே சங்கத்தின் செயலாளர் சென்சி எம்.பி.செயினுலாப்தீன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

வாச்சிக்குடா விஷேட நிருபர்

Tue, 03/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை