​பெரியகல்லாறு வைத்தியசாலையில் கொரோனா தடுப்பு செயற்றிட்டம்

பெரியகல்லாறு வைத்தியசாலையில் கொரோனா தொற்றைத்தடுக்கும் முகமாக விசேட செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று வைத்திய அதிகாரி ​ெடாக்டர் அமரசேன உதயசூரிய தலைமையில் நோயாளிகளை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வுத் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கென கொரோனா தொற்று விசேட செயற்குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைக்கு வருகைதரும் உத்தியோகத்தர்கள் மற்றும் நோயாளிகள் கை கழுவுவதற்கென தனியான இடம் ஒன்று ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அனைவரும் கை கழுவிய பிற்பாடே வைத்தியசாலைக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

அத்துடன் காய்ச்சல், இருமல், தடிமல் ஆகிய அறிகுறிகளுடன் வருகை தருபவர்கள் ஏனைய நோயாளிகளுடன் கலந்து இருக்காதவகையில் தனியாக தங்கி சிகிச்சை பெறுவதற்கென வைத்தியசாலைக்கு முன்புறம் சிகிச்சை முகாம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்குவதற்கும் உள்ளுர்வாசிகள் தங்குவதற்கும் என வேறு வேறாக இருக்கைகள் போடப்பட்டுள்ளன. நோயாளிகளை பரிசோதிக்கும் வைத்தியர் அணிவதற்கென சிறப்பு உடை ஒன்றும் இங்குள்ளவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

சிகிச்சை பெறுவபவர்களில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என சந்தேகிக்கப்படுபவர்கள் அதற்கென அமைக்கப்பட்டுள்ள விசேட தங்குவிடுதியில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளனர்.

 

பாண்டிருப்பு தினகரன் நிருபர்

Wed, 03/18/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை