ஊரடங்கு தளர்வின் பின்னர் கல்முனை கடற் தொழிலாளர்கள் மகிழ்ச்சி

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் அம்பாறை மாவட்ட  கடற்றொழில் மீனவர்கள் அதிகளவான மீன்களை பிடித்துள்ளனர். இவ்வாறு அதிகளவான மீன்களை இன்று (23) காலை முதல் பிடித்து வந்ததுடன் குறைந்த விலையில் நுகர்வோருக்கு விற்பனையும் செய்தனர்.

குறிப்பாக மருதமுனை, அட்டாளைச்சேனை, நிந்தவூர், பாண்டிருப்பு பெரியநீலாவணை, சாய்ந்தமருது, ஒலுவில், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் இவ்வாறு அதிகளவு மீன்களை மீனவர்கள் பிடித்தனர்.

இதில் பாரை மீன் ஒரு கிலோ 500 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 800 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ 600 ஆகவும் சூடை மீன் ஒரு கிலோ 800 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 900 ரூபாயாகவும் வளையா மீன் 650 ரூபா  ஆகவும்  நண்டு ஒரு கிலோ 550 ரூபா  ஆகவும் விற்க்கப்பட்டன..

கடந்த மூன்று தினங்களாக  வாழ்வாதாரத்தை இழந்த மீனவர்கள் தற்போது மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன்  பெரும் நஷ்டத்திலேயே கடந்த 3 நாட்களாக  வாழ்க்கை செலவுகளை நடத்தி வருவதாகவும் கரை வலை இழுக்க யாரும் வருவதில்லை எனவும்  இதனால்  வாழ்வாதாரம் பெரும் பாதிப்புறுவதாக    கரையோர மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் தெரிவித்தனர்.

பாறுக் ஷிஹான்

Mon, 03/23/2020 - 13:42


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை