சர்வதேச கால்பந்து போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் எதிரொலியாக அனைத்து சர்வதேச கால்பந்து போட்டிகளும் ஒத்தி வைக்கப்படுவதாக பிஃபா அறிவித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

மார்ச், ஏப்ரல் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து சர்வதேச கால்பந்து போட்டிகளும் ஒத்தி வைக்கப்படுகின்றன. தேசிய அணிகளுக்கு தங்கள் வீரர்களை அனுப்ப மறுப்பதற்கு கழக அணிகள் அனுமதிக்கப்படும். ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் 2022 உலகக் கிண்ண கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டங்கள் அட்டவணையை சீரமைப்பு செய்து வருகிறோம்.

மேலும் போட்டிகளை ஒத்தி வைப்பது தொடர்பான இறுதி முடிவு அந்தந்த அமைப்புகள் வசம் தரப்படுகிறது. வழக்கமாக தேசிய அணிகளின் கால்பந்து ஆட்டங்களில் பங்கேற்க கழக அணிகள் தங்கள் வீரர்களை விடுவிப்பது வழக்கம். ஆனால் தற்போதுள்ள அசாதாரண சூழல் காரணமாக வீரர்களை விடுவிக்கத் தேவையில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ப்ரீமியர் லீக், சம்பியன்ஸ் லீக் உட்பட ஐரோப்பிய கால்பந்து தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Mon, 03/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை