சபையின் அனுமதியின்றி கழிவுப் பொருட்கள் எரிப்பு

யாழிலுள்ள பிரபல விருந்தினர் விடுதி ஒன்று நல்லூர் பிரதேச சபையின் அனுமதியின்றி தமது விடுதி கழிவுகளை சபை எல்லைக்குள் கொட்டி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.மாநகர சபை எல்லைக்குள் உள்ள குறித்த விடுதியின் கழிவுப் பொருட்கள், நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் உள்ள அரியாலை பகுதியில் உள்ள விடுதிக்கு சொந்தமான காணிக்குள் விடுதியின் உரிமையாளரின் பணிப்பில் கொட்டி எரியூட்டப்பட்டு வருகின்றது.

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட காணிக்குள் கழிவுப் பொருட்களை எரியூட்டி அழிக்க பிரதேச சபையிடம் அனுமதி பெறப்பட வேண்டிய கட்டாயம் இருக்கும் போது சபையின் அனுமதியின்றி கழிவுப் பொருட்கள் எரியூட்டி அழிக்கப்படுவது தொடர்பில் சபையின் கவனத்திற்கு அப் பகுதி மக்கள் கொண்டு சென்றுள்ளனர்.

உரிய பொறிமுறைகளின்றி கழிவுப் பொருட்கள் எரியூட்டி அழிக்கப்படுவதனால் , சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

Tue, 03/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை