கடற்படையினால் தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு

இலங்கை கடற்படை கடந்த 18, 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் காலி மாவட்டத்தின் மக்கள் நடமாடும் பல பொது இடங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு தொற்று நீக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சிவாவின் உத்தரவின் பேரில், உலக சுகாதார நிறுவனத்தால் தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த பொறிமுறையை மேம்படுத்தும் நோக்கில். பல நிகழ்ச்சித் திட்டங்கள் கடற்படையால் மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, தெற்கு கடற்படை பகுதி  தளபதி ரியர் அட்மிரல் கசபா பால் வழிகாட்டுதலின் கீழ், கடற்படையின் உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி பிரிவு தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்டு, கடந்த மூன்று நாட்களில் காலி துறைமுகம், கலுவெல்ல கிறிஸ்தவ தேவாலயம் மற்றும் காலி மாவட்ட செயலக வளாகங்களில் தொற்று நீக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையில், கடற் பிராந்தியத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் கடற்படை மேற்கொண்டு வருகிறது.

Sun, 03/22/2020 - 17:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை