கொரோனாவினால் முதல் இலங்கையர் மரணம்!

கொரோனாவினால் முதல் இலங்கையர் மரணம்-1st Sri Lankan Died Dut to COVID19-Reported in Switzerland

புத்தளத்தைச் சேர்ந்த 59 வயது நபர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதல் இலங்கையர் மரணமடைந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் 59 வயதான ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் புத்தளத்தைச் சேர்ந்தவர் எனவும், சுவிட்சர்லாந்தின் புனித கலன் (Saint Gallen) பகுதியில் வசித்து வந்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

நேற்றுமுன்தினம் (25) இவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுவிஸ் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

சுவிஸில் இது வரை சுமார் 11,712 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதோடு, 192 பேர் மரணமடைந்துள்ளனர்.

ஆயினும் அங்கு 131 பேர் இந்நோயிலிருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Fri, 03/27/2020 - 09:41


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக