எச்.ஐ.வியிலிருந்து உலகில் இரண்டாமவர் குணமடைந்தார்

எச்.ஐ.வி தொற்றில் இருந்து உலகில் இரண்டாவது நபர் ஒருவர் குணமடைந்திருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 40 வயதான அடம் கஸ்டிலிஜோ என்ற ஆடவர் நோய்க்கான மருத்துவ சிகிச்சைகளை 30 மாதங்களுக்கு முன் நிறுத்தியபோதும் வைரஸ் பாதிப்பில் இருந்து விடுதலை பெற்றுள்ளார்.

அவர் எச்.ஐ.வி மருந்துகளால் குணமடையாத நிலையில் அவருக்கு ஏற்கனவே இருந்த புற்று நோய்க்காக பெற்ற குருத்தணு சிகிச்சை காரணமாக வைரஸ் தொற்று நீங்கி இருப்பதாக ‘தி லென்செட் எச்.ஐ.வி’ சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. குருத்தணு நன்கொடையாளர்களின் ஒரு அசாதாரண மரபணு கஸ்டிலிஜோவை எச்.ஐ.வியில் இருந்து பாதுகாத்திருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக டிமொத்தி பிரெளன் 2011 இல் எச்.ஐ.வி தொற்றில் இருந்து குணம்பெற்ற முதலாமவராக பதிவானார். அவரும் மூன்றரை ஆண்டுகள் இதுபோன்ற குருத்தணு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலேயே குணமடைந்தார். குருத்தணு சிகிச்சையினால் எச்.ஐ.வி தொற்றில் இருந்து எதிர்ப்புச் சக்தி கொண்ட கொடையாளியுடன் நோயாளரின் சொந்த நோயெதிர்ப்பு செல்கள் மாற்றப்படுவதன் மூலம் வைரஸ் உடலுக்குள் நகலெடுப்பது நிறுத்தப்படுகிறது.

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை