இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற அரியாலை கில்லாடிகள் நூறு

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா மன்றத்தின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்டு வரும் தொழில்முறை ரீதியான துடுப்பாட்ட தொடரின் முதலாவது தகுதிகான் போட்டி கல்வியங்காடு ஞானபாஸ்கரோதயா மைதானத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு மின்னொளியில் நடைபெற்றது.

மேற்படி தொடரில் அரியாலை கில்லாடிகள் நூறு அணியினை எதிர்த்து காரை கிங்ஹோப்றாஸ் அணி மோதியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற காரை கிங்ஹோப்றாஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்ய முதலில் துடுப்பெடுத்தாடிய அரியாலை கில்லாடிகள் நூறு அணி பத்து பந்து பற்றிமாற்றத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அரியாலை கில்லாடி நூறு அணி சார்பாக துசியந்தன் பதினெட்டு ஓட்டங்களையும் காரை கிங்ஹோப்றாஸ் அணி சார்பில் கனிஸ்ரன் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

79 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய காரைகிங் ஹோப்றாஸ் அணி பத்து பந்துபரிமாற்றம் நிறைவில் எட்டு விக்கெட்டுக்களை இழந்து 58 ஒட்டங்களை மாத்திரம் பெற்று இருபது ஒட்டங்களினால் தோல்வியடைந்தது. காரை கிங்ஹோப்றாஸ் அணி சார்பாக உமைசுதன் இருபத்தாறு ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்து வீச்சில் அரியாலை கில்லாடிகள் நூறு அணி சார்பாக அருண்ராஜ் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இப் போட்டியின் ஆட்டநாயகனாக அரியாலை கில்லாடிகள் நூறு அணியின் அருண்ராஜ் தெரிவு செய்யப்பட்டார். இவ் வெற்றிமுலம் அரியாலை கில்லாடிகள் நூறு அணியினர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதோடு தோல்வியடைந்த காரை கிங்ஹோப்றாஸ் அணி இரண்டாவது தெரிவு போட்டிக்கு தகதி பெற்றுள்ளது.

பலாலி விளையாட்டு நிருபர்

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை