கடும் வெப்ப நிலை; சிறுவர், வயோதிபரை பாதுகாக்க அறிவுரை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் உஷ்ணமான காலநிலை மே மாதம் வரை நீடிக்குமென காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் இரவு வேளையில் உஷ்ணம் அதிகரிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாத இறுதியில் இடைப் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பமாகலாமென்றும் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டது.

ஏப்ரலில் இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுப்பதால் வடமேல்,மேல்,சப்ரகமுவ,தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் கடும் உஷ்ண காலநிலை காணப்படுமென அறிவிக்கப்படுகிறது.

 குழந்தைககள்,4 வயதிற்கு குறைவான சிறுவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், பருமனானவர்கள், நோயாளிகள் ஆகியோர் பாதுகாப்புடனிருப்பதுடன் கடும் உஷ்ணத்தால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை மட்டுப்படுத்த கூடுதலாக நீர் அருந்துமாறும் கடுமையாக உழைக்கும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 2 முதல் 4 குவளை நீர் அருந்தல் சிறந்ததாகும்.

முடிந்தளவு வீட்டில் அல்லது கூரையுள்ள இடங்களில் தங்குமாறும் குளிரூட்டி மின்விசிறி பாவித்தல், குளிர்நீர்அருந்துதல், உடலை நீரால் துடைத்தல், சூரிய வெளிச்சம்படுவதிலிருந்து தவிர்த்தல், தொப்பி அணிதல் குடை பிடித்தல் போன்ற பாதுகாப்பு வழிகளை கையாளுமாறும் கோரப்பட்டுள்ளது. (பா)

Tue, 03/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை