கைவிடப்பட்ட வயல்நிலங்களில் மீண்டும் பயிர்ச்செய்கை

மாத்தளை மாவட்டத்தில் கைவிடப்பட்ட வயல்நிலங்களில் மீண்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாத்தளை மாவட்ட கமநல சேவைத்திணைக்கள உதவி ஆணையாளர் எம்.எச். குமாரிஹாமி தெரிவித்தார்.

சுமார் 200 ஏக்கர் வயல்நிலங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மாத்தளை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதேஅவர் இவ்வாறுதெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

இம்மாவட்டத்தில் தம்புள்ள கலேவெல, உக்குவளை, மாத்தளை, வில்கமுவ, பல்லேபொல ஆகிய பிரதேசங்களில் பல்வேறு காரணங்களால் சுமார் 200 ஏக்கர் வயல்நிலங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.

பாழடைந்து காணப்படும் 200 ஏக்கர் வயல் நிலங்களில் மீண்டும் நெற்செய்கை, உபஉணவுப் பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்று கமநலச் சேவைநிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

விவசாயிகளுக்குத் தேவை யான உரம், விதை வகைகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதுடன், இலவசமாக வழிகாட்டல் ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாத்தளை சுழற்சி நிருபர்

Fri, 03/13/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை