கடத்தல்களை தடுக்க இலங்கை - இந்திய கடற்படை கூட்டு ரோந்து

இலங்கை - - இந்திய சர்வதேச கடல் எல்லை ஊடாக அதிகரித்து வரும் கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை விரைவில் இந்திய கடற்படையின் உதவியுடன் முழுமையாக கட்டுபடுத்துவோம் என இலங்கை கடற்படை கட்டளை தளபதி பியஸ் டீ சில்வா தெரிவித்தார்.

கடந்த சில நாட்களாக இலங்கை - --இந்திய சர்வதேச கடல் எல்லை வழியாக கஞ்சா, பீடி இலைகள், தங்கம் என்பவை கடத்தப்படுவதாகவும் தமிழகத்தில் இருந்து இலங்கை அகதிகள் உரிய அனுமதியின்றி தோணியில் இலங்கைக்கு செல்வதாகவும் சட்ட விரோத நடவடிக்கைகள் அதிகரித்து வருவதாகவும் இலங்கை கடற்படை கட்டளைத் தளபதி பியஸ் டீ சில்வா தெரிவித்தார்.

இது குறித்து கச்சதீவு திருவிழாவில் கலந்துகொண்ட இவரிடம் இந்திய ஊடகங்கள் கேட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை கடற்படை சார்பில் சர்வதேச கடல் எல்லையில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எனவே எதிர்வரும் நாட்களில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல்படை உதவியுடன் இந்தியாவில் இருந்தவரும் கேரள கஞ்சா, அதே போல் இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்படும் தங்கம் என சர்வதேச கடல் வழியாக நடைபெறும் கடத்தல் சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்படும். இவற்றை தடுக்க இலங்கை கடற்படை இந்திய கடற்படையுடன் இனைந்து கூட்டு பயிற்சியில் ஈடுபடுவது குறித்து இருநாட்டு கடற்படைகளும் ஆலோசனை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கந்தர்மடம் நிருபர்

Mon, 03/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை