திருகோணமலை வெந்நீரூற்று கிணறு தற்காலிகமாக பூட்டு

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகளுக்கு அமைவாக, திருகோணமலை வெந்நீரூற்றுக் கிணறு பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை பெரிதும் கவரும் இந்த வெந்நீரூற்றுக் கிணறு பகுதியை தற்காலிகமாக மூடுவதற்கு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட தொல்பொருள் அதிகாரி மொஹான் ஆரியதிலக தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்; நேற்று (16) முதல் மறு அறிவித்தல் வரை வெந்நீரூற்று கிணறு சுற்றாடல் பகுதி மூடப்படுவதாகக் குறிப்பிட்டார்.  

அதேவேளை, திருகோணமலை நிலாவெளி பறவைகள் தீவையும் நேற்று முதல் 2 வார காலத்திற்கு மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வன ஜீவராசிகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் கீர்த்தி சந்திரரத்ன தெரிவித்துள்ளார். (ஸ)

(கிண்ணியா மத்திய நிருபர்)   

Tue, 03/17/2020 - 10:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை