தலிபான் கைதிகளை விடுவிக்க ஆப்கான் ஜனாதிபதி உத்தரவு

தலிபான்களுடனான அமைதி முயற்சியின் ஓர் அங்கமாக 1,500 தலிபான் கைதிகளை விடுவிப்பதற்கு ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி ஒப்புதல் அளித்துள்ளார்.

“மீண்டும் போர்க்களத்திற்கு திரும்புவதில்லை என்ற உத்தரவாதக் கடிதம் ஒன்றை பெற்றே அனைத்து கைதிகளையும் விடுப்பதற்கு ஜனாதிபதி ஆணை பிறப்பித்துள்ளார்.

இதற்கு பகரமாக 1,000 ஆப்கான் துருப்புகளை கையளிப்பதற்கு தலிபான்கள் இணங்கியுள்ளனர்.

தலிபான்களுடன் அமெரிக்கா செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு அமைய அமெரிக்கா தமது துருப்புகளை ஆப்கானில் இருந்து வாபஸ் பெறும் நடவடிக்கையை ஆரம்பித்த நிலையிலேயே இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனாதிபதி கையெழுத்திட்டிருக்கும் ஆணையில் அடுத்து 15 நாட்களுக்குள் 1,500 கைதிகளை விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி ஒவ்வொரு நாளும் ஆப்கான் சிறைகளில் இருந்து 100 கைதிகள் விடுவிக்கப்படவுள்ளனர்.

இந்த கைதிகள் விடுதலைக்கு இணையாக ஆப்கான் அரசு மற்றும் தலிபான்களுக்கு இடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன.

இந்த பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டால் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறையும் மேலும் 500 தலிபான் கைதிகளை விடுவித்து மொத்தம் 5,000 கைதிகளை விடுவிக்க உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Thu, 03/12/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை