இலங்கை நுழைவதற்கு வழங்கப்பட்ட அனைத்து வீசாக்களும் இடைநிறுத்தம்

இலங்கை நுழைவதற்கு வழங்கப்பட்ட அனைத்து வீசாக்களும் இடைநிறுத்தம்-All types of Visas already granted have been temporarily suspended

இலங்கைக்குள் நுழைவதற்காக வழங்கப்பட்ட அனைத்து வகையான வீசாக்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, அனைத்து வகையான இலத்திரனியல் பயண அங்கீகாரங்கள், நுழைவு வீசாக்கள், வருகைதரு அங்கீகாரங்கள், பல் நுழைவு வீசாக்கள், குடியிருப்பு வீசாக்கள் (Electronic Travel Authorizations-ETA, Entry Visas, Landing Endorsements, Multiple Entry Visas, Residence Visas) உள்ளிட்ட ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து நாடுகளுக்குமான வீசாக்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்குள் நுழைவதற்கான அனைத்து வகையான வீசா வழங்கல்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு, குடியகல்வு திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

நாட்டிற்குள் வரும் அனைத்து விமானங்களையும் இடைநிறுத்தி வைக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதற்கமைய, குறித்த வீசாக்களைக் கொண்டிருக்கும் நபர்கள், இன்னும் இலங்கை வருகை தராத நிலையிலும் அவர்களது வீசாக்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்படுவதாகவும், அவர்கள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Wed, 03/25/2020 - 13:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை