தனிமைப்படுத்தப்பட்டோர் இருந்த ஹோட்டல் இடிந்து அறுவர் பலி

சீனாவின் குவான்சு நகரில் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் வசதியாக பயன்படுத்தப்பட்ட ஹோட்டல் ஒன்று இடிந்து குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு 28 பேர் காணாமல்போயுள்ளனர். ஐந்து மாடிகள் கொண்ட ஷின்ஜியா ஹோட்டலின் இடிபாடுகளில் மீட்புப் பணியாளர்கள் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தக் கட்டடம் இடிந்து விழும்போது அதில் 71 பேர் இருந்திருப்பதோடு பலரும் மீட்கப்பட்டதாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றியவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் வசதியாகவே இந்த ஹோட்டல் பயன்படுத்தப்பட்டதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தக் கட்டடத்தில் இருந்த 71 பேரில் 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்துள்ளனர்.

எனினும் கட்டடத்தின் முதல் மாடியில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வந்திருப்பதாக கூறப்படுகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றின் மையப்புள்ளியாக இருக்கும் வூஹான் நகரில் இருந்து 1,000 கிலோமீற்றல் தொலைவில் உள்ள குவன்சு நகரில் 47 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

Mon, 03/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை