கிண்ணியா பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை

கிண்ணியா பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை-COVID19-Negative-Kinniya Women-Trincomalee GA-Asanka Abeywardena

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம். அசங்க அபேவர்தன

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக சந்தேகத்தின் பேரில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்று (29)அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையின் பின் இன்று (30) வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இல்லை என, ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் புத்தளம் பிரதேசத்தில் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கிண்ணியா பிரதேசத்தில் இருந்து சென்றிருக்கின்றார்கள்.

மணமகன் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்கின்ற படியினால் மணமகன் இல்லத்தில் ஒரு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.

இந் நிகழ்வுகளில் கலந்து கொண்ட பெண் ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டிருக்கின்றது.

குறித்த பெண் ஏற்கனவே சில நோய்களுக்காக மருந்து உட்கொண்டு வருகின்றனர் என்கின்ற வகையில் இவருக்கு ஏற்பட்ட காய்ச்சல் தொடர்பாக அவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் .

இந்நிலையில், இது தொடர்பில் பல்வேறு வதந்திகளும் பரவி வந்தமை குறிப்பிடத்த்ககது.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ ஹலீம்) 

Mon, 03/30/2020 - 17:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை