கழிப்பறைத் தாள்களை வாங்கிக் குவிக்கும் மக்கள்

கொரோனா அச்சம் காரணமாக ஜப்பானில் இருந்து சீனா தொடக்கம் அமெரிக்கா வரை கழிப்பறை தாள்கள், கையை சுத்தப்படுத்தும் திரவங்கள் மற்றும் முகக் கவசங்கள் கடைகளில் விற்றுத் தீர்ந்தவண்ணம் உள்ளன.

விநியோகச் சங்கிலியை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தவிர்த்து அமைதி காக்கும்படி மக்களை அறிவுறுத்தியபோதும் இந்த போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. பல்பொருள் அங்காடிகளில் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவது குறித்த முறைப்பாடுகள் சமூக ஊடகங்களில் தொடர்ந் பதிவாகி வருகிறது.

அவுஸ்திரேலியாவின் மிகப் பெரிய பேரங்காடியான வுல்வேத்ஸ், கழிப்பறைத் தாள்களை வாங்குவதற்குக் கட்டுப்பாடு விதித்துள்ளது. ஒருவருக்கு 4 கட்டு கழிப்பறைத் தாள்கள் மட்டுமே விற்கப்படும் என்று அது அறிவித்துள்ளது. கொவிட்– 19 வைரஸ் தொற்று அச்சம் காரணமாகப் பலரும் தேவைக்கு அதிகமாகப் பொருட்களை வாங்குவதாக சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாகப் பாஸ்தா, டின்களில் அடைக்கப்பட்ட உணவு ஆகியவற்றுக்கான தேவை அதிகரித்துள்ளது. பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவவில்லை என்றும் மக்கள் அமைதி காக்கும்படியும் ஜப்பான் பிரதமர் தனது ட்விட்டரில் மக்களை கோரியிருப்பதோடு, அமெரிக்காவில் பேரங்காடிகளில் கழிப்பறைத் தாள்கள் இருக்கும் தட்டுகள் காலியாகிக் காணப்படும் புகைப்படங்கள் சமூகதளங்களில் பகிரப்படுகின்றன.

Fri, 03/06/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை