வடகொரியா ஏவுகணைகள் பாய்ச்சி மீண்டும் சோதனை

வட கொரியா, சொண்டொக் நகரிலிருந்து கிழக்குக் கடல் பகுதியில் அடையாளம் தெரியாத நான்கு ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளது.

அதிகபட்சம் 50 கிலோமீற்றர் உயரத்தில் 200 கிலோமீற்றர் தூரத்துக்கு அந்த ஏவுகணைகள் பாய்ந்து சென்றதாகத் தென் கொரிய இராணுவக் கூட்டுத் தளபதிக் குழு தெரிவித்துள்ளது. பலவகைக் குறுந்தொலைவு ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டிருக்கலாம் என்றும் அது கூறியது. கடந்த வாரம் வட கொரியா இரண்டு குறுந்தொலைவு ஏவுகணைகளைச் சோதித்துப் பார்த்தது. குளிர்காலப் பயிற்சியின் ஒரு பகுதியாக அவை பாய்ச்சப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அமெரிக்கா தன் மீது விதித்துள்ள தடைகளை நீக்கக் கோரி வட கொரியா ஏற்கனவே காலக்கெடு விதித்திருந்தது. அந்த அவகாசம் கடந்து விட்ட நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.

Tue, 03/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை