வைரஸை கட்டுப்படுத்த ஆசிய நாடுகள் தீவிரம்

கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதில் பல ஆசிய நாடுகளும் திவிரம் காட்ட ஆரம்பித்துள்ளன.

மலேசியா, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட பல நாடுகளும் எல்லைக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியுள்ளன. எனினும் தெற்காசிய துணைக் கண்டத்தில் நோய்த் தொற்று பதிவானோர் எண்ணிக்கை 500க்கும் குறைவாக இருந்தபோதும் சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தும் அச்சம் உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக ஆசிய பங்குச் சந்தை தொடர்ந்து சரிவை பதிவு செய்துள்ளது.

தென் கிழக்கு ஆசிய நாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. “கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அதிகம் பேர் இதனால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்” என உலக சுகாதார அமைப்பின் பிராந்திய பணிப்பாளர் பூனம் கெட்ரபால் சிங் தெரிவித்தார் “பெரும் எண்ணிக்கையில் வைரஸ் தொற்று பரவி வருகிறது. இது எச்சரிக்கையாக இருக்க வேண்டியதை உணர்த்துவதோடு, தீவிர கண்காணிப்பும் தேவைப்படுகிறது. மேலும் இது பரவாமல் இருக்க நாம் அதிக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது. முக்கியமாக இதை உடனடியாக எடுக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் உள்ள 11 நாடுகளில் எட்டு நாடுகளில் தற்போது இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.

Thu, 03/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை